Canada

ரொறன்ரோவில் குழந்தைக்கு சின்னமுத்து நோய் தொற்று: மக்களுக்கு எச்சரிக்கை!

 

 

ரொறன்ரோவில் 12 மாதத்திற்கு உட்பட்ட வயதுடைய குழந்தை ஒன்றுக்கு சின்னமுத்து எனப்படும் தட்டம்மை நோய் தோற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சுமார் நூறு பேருக்கு மருத்துவ அதிகாரிகளால் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நோயின், தாக்கம் 7-ல் இருந்து 21 நாட்கள் வரையிலான காலப்பகுதியிலேயே வெளியே தெரியும் என்பதால், அனைவரும் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர்.

வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டு விட்டு திரும்பிய ஒரு குடும்பத்தின் 12 மாதத்திற்கு உட்பட்ட வயதுடைய குழந்தை ஒன்றுக்கே இந்த நோய் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த தொற்று கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவமனையின் பணியாளர்கள், அங்கு வந்திருந்த நோயாளிகள் ஆகியோருக்கே, ரொறன்ரோ மருத்துவ அதிகாரிகளால் தொடர்பு கொள்ளப்பட்டு எச்சரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், பாதுகாப்பு கருதி அந்தக் குடும்பத்தார் தொடர்பான விபரங்களையோ, அவர்கள் எந்த நாட்டுக்குச் சென்று வந்தார்கள் என்ற விபரங்களையோ வெளியிடவில்லை என்றும் ரொறன்ரோ நகர சுகாதார மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் பியர்சன் அனைத் துலக விமான நிலையம் ஊடாகவே பயணித்துள்ளதாகவும், அப்போது குறித்த அந்த குழந்தையிடம் எந்த வித நோய் அறிகுறிகளும் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top