News

லண்டனில் தொடரும் கத்திக்குத்துத் தாக்குதல்கள்!

கிழக்கு லண்டன் லெய்ற்ரன் பகுதியில் நேற்றையதினமும் இளைஞரொருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினை சேர்ந்த 26 வயதான டேவிட் மார்டினெஸ் எனும் இளைஞரே இத்தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை 4.30 மணியளவில் பொலிஸாரும் அவசரசிகிச்சைப் பிரிவினரும் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டதாகவும் சிகிச்சை பலனின்றி மாலை 5.10 மணியளவில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆறு நாட்களில் இங்கிலாந்தில் கத்திக்குத்துத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நான்காவது நபர் இவ்விளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு ஆரம்பித்து இரண்டு மாதங்களே முடிவடைந்துள்ள நிலையில் இங்கிலாந்தில் இதுவரை குறைந்தது 36 பேர் கத்திக்குத்துத் தாக்குதல்களுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top