News

லண்டன்,கனடா வாழ் தமிழ் மக்களிடம் ஐ.நாவில் இருந்து ஈழப் பெண் விடுத்த முக்கிய கோரிக்கை!

 

புலம்பெயர் தமிழர்களின் போராட்ட வலிமையை கனடா வாழ் புலம்பெயர் தமிழர்கள் அரச தரப்புக்கு எடுத்து சொல்ல வேண்டும் என்று காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில்  ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  இலங்கை அரசாங்கத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயத்தில் மீண்டும் வழங்கப்பட்டுள்ள கால நீட்சியானது “வெந்த புண்ணில் வேல் பாச்சுவது போல” இருக்கின்றது.

இதற்கு முன்னர் வழங்கப்பட்ட இரண்டு வருடத்தில் எதையும் செய்ய வில்லை. இந்நிலையில் மீண்டும் வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் நியாயமற்றது. இதேவேளை, புலம் பெயர் தமிழர்கள் அதிகமாக வாழும் கனடா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகள் கால நீடிப்பு வழங்க இணை அனுசரணை வழங்கிய நிலையில் அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest News

To Top