Canada

வின்ட்சர் பகுதியில் பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

 

வின்ட்சர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில், பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து, சனிக்கிழமை மதியம் சரியாக 1-மணியளவில் பாத் அவென்யூ மற்றும் குயின் ஸ்ட்ரீட்டின்பார்க் அவென்யூ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

Chatham-Kent பொலிசாரின் தகவலின்படி, குறித்த விபத்தில் சிக்கி 65-வயது பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெர்வித்துள்ளனர்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் [email protected] என்ற மின் அஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top