Canada

 வின்னிபெக்கில் பெண் ஒருவர் கொடூர கொலை !

 

வின்னிபெக் பகுதியில் பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டின் 11-வது கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதையடுத்து, குறித்த கொலை சம்பவம் தொடர்பாக 911-பொலிஸாருக்கு அழைக்க பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

குறித்த கொலை சம்பவம், வின்னிபெக் தென்மேற்கில், ராக்கிளிஃப் வீதியின் 100 தொகுதியில் செவ்வாய்க்கிழமை அன்று 45 மற்றும் 65 வயதுடைய பெண்ணின் வீட்டில் சரியாக காலை 10:45-மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பாக, பெண் ஒருவர் சிகிக்சைக்காக உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிக்சை பலனின்றி குறித்த பெண் தற்போது மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, குறித்த பெண்ணின் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், குறித்த கொலை சம்பவம் தொடர்பில் எவரேனும் கைது செய்யப்பட்டவில்லை. மேலும், இது தொடர்பாக தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக பொலிசாரினை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top