Canada

வின்னிபெக் தீ விபத்து- நொடி பொழுதில் உயிர் பிழைத்த குடும்பத்தினர்!

 

வின்னிபெக் பகுதியில் ஒருவரது வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கிய குடும்பத்தினர் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த தீ விபத்து, வின்னிபெக் பகுதியின் பேவர்லி தெருவின் 700-பிளாக் பகுதியில் சரியாக இரவு 7:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது

இதையடுத்து, தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அழைக்கப்பட்டனர். இதில், குறித்த பகுதிக்கு விரைந்த வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு நேர போராட்டத்திற்கு பிறகு கட்டுக்கடங்கா தீயினை 8-மணியளவில் கட்டுப்படுத்தினர்.

இதில், வீடு அதிக அளவு சேதமடைந்த நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் பத்திரமாக காயங்களின்றி உயிர் பிழைந்தனர்.

இதையடுத்து, குறித்த தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top