Canada

ஹுவாவி அதிகாரியின் நாடுகடத்தல் வழக்கு ஒத்திவைப்பு

 

 

கனடாவில் கைதான ஹூவாவி தொலைதொடர்பு நிறுவனத்தின் நிதி தொடர்பான தலைமையதிகாரி மெங் வான்ஷுவை (Meng Wanzhou) நாடு கடத்துவது தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஹுவாவி அதிகாரியை அமெரிக்காவிற்கு நாடுகடத்துவது தொடர்பான வழக்கு கனடா, வான்கூவர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஹுவாவி அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ள பிணை தொடர்ந்து அமுலில் இருக்கும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஹுவாவி அதிகாரியை நாடுகடத்துவதற்கு கனேடிய நீதிமன்றம் தீர்மானிக்கும் பட்சத்தில் நீதித்துறை நடைமுறைகளின்படி மெங், உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது.

உயர் நீதிமன்றமும் அதே தீர்மானத்தை முன்வைக்குமாயின், கனேடிய நீதி அமைச்சர் இது தொடர்பான இறுதி முடிவை முன்வைப்பார். இந்த மூன்று படிமுறைகளில் ஒரு இடத்திலேனும் நாடுகடத்தலுக்கான கோரிக்கை நிராகரிக்கப்படுமாயின், மெங் விடுதலை செய்யப்படக்கூடும் எனக் கூறப்படுகிறது.

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் விதித்த தடைகளை மீறி ஈரானுக்கு தொலைதொடர்பு கருவிகளை விற்பனை செய்ததாக ஹூவாவி தொலைதொடர்பு நிறுவன தலைமை நிதி அதிகாரி கனடாவின் வாங்கூவரில் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் அறிவுறுத்தலின் பிரகாரம் அவர் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில், கனடா அவரை விடுவித்து தமது நாட்டிடம் ஒப்படைக்க வேண்டுமென சீனா வலியுறுத்தி வருகின்றது.

இந்நிலையில், அவரை அமெரிக்காவிற்கு நாடுகடத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அவ்வாறு இடம்பெற்றால் கனடா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடுமென சீனா எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top