Canada

50-வயது மிசாகுவா மனிதன் மாயம்- குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை!

 

50-வயது மிசாகுவா மனிதன் ஒருவன் மாயமானது தொடர்பாக கண்டுபிடித்து தர குடும்பத்தினர் கண்ணீருடன் பொலிசாரிடம் மனு அளித்துள்ளனர். இதையடுத்து, பொது மக்களிடம் குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் உதவி கோரியுள்ளனர்.

குறித்த, 50 வயது நிறைந்த Lindor Ahmetaj என்ற நபர் கடந்த செவ்வாய் கிழமை பிப்ரவரி 26 அன்று மயமானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இவர் கடைசியாக, Bridgewood Drive and Bloor Street சரியாக 6-30 மணியளவில் தென்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீல் மண்டலம் பொலிஸார் தகவலில் படி, குறித்த வெள்ளை ஆண், சுமார் ஐந்து அடி-ஒன்பது அங்குல உயரம், 155 பவுண்டுகள் எடையுடன் காணப்படுவார். Lindor கடைசியாக கருப்பு ஜாக்கெட், ஜீன்ஸ் மற்றும் கருப்பு பூட்ஸ் அணிந்திருந்தார் என்றும் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த நபர் தொடர்பான தகவல் தெரிந்த பொது மக்கள் பீல் மண்டலம் பொலிஸார் 905-453-2121, ext. 1233.என்ற இலக்கு எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top