அமெரிக்காவில் கார்களின் மீது கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலி, 8 பேர் படுகாயம்!

இந்த நிலையில், நேற்று முன்தினம் வழக்கம் போல பணிகள் நடந்து கொண்டிருந்தபோது பிற்பகல் சுமார் 3 மணியளவில் திடீரென அந்த ராட்சத கிரேன் சரிந்து சாலையில் விழுந்தது. இதில், சாலையில் சென்று கொண்டிருந்த கார்கள் மீது, ராட்சத கிரேனின் ஒரு பகுதி விழுந்து, கார்கள் சின்னாபின்னமாகின.
இந்த கோர விபத்தில், ராட்சத கிரேனை இயக்கிய 2 டிரைவர்களும், வெவ்வேறு கார்களில் இருந்த 2 நபர்கள் என 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் மற்ற கார்களில் இருந்த ஒரு பெண் மற்றும் அவரது குழந்தை உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்கள். கிரேன் சரிந்து விழுந்ததில் மொத்தம் 6 கார்களும், கட்டுமான பணிகள் நடந்து வரும் கட்டிடத்தின் ஒரு பகுதியும் பலத்த சேதம் அடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.