News

 அமெரிக்காவில் 9 கொலைகள் செய்ய திட்டமிட்டிருந்த 14 வயது சிறுமிகள்..

 

அமெரிக்காவில் 9 பேரை கொலை செய்ய திட்டமிட்டிருந்த இரண்டு மாணவிகளை பொலிசார் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அவென் பார்க் நடுநிலைப்பள்ளியில் படிக்கும் 14 வயது மதிக்கத்தக்க இரண்டு பள்ளி மாணவிகளே இந்த செயலில் ஈடுபட முயன்றுள்ளனர் என்பதை பள்ளிஅ ஆசியர் கண்டு பிடித்துள்ளார்.

இதையடுத்து இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் இரண்டு மாணவிகளையும் கைது செய்யுள்ளனர்.

மேலும் அந்த மாணவிகள் துப்பாக்கிகள் வாங்குதல், கொலை செய்தல் மற்றும் உடல்களை புதைத்தல் ஆகியவை பற்றி எட்டு பக்கம் கொண்ட கடிதத்தில் விவரித்துள்ளனர்.

இந்த இருவரும் 9 கொலைகளையும், 3 கடத்தல்களையும் செய்ய இருந்ததாகவும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் எழுதி வைத்ததை தேடியபோது, அந்த மாணவர்கள் மிகையுணர்ச்சிக் கோளாறால்”(ஹிஸ்டீரியா) பாதிக்கப்பட்டவர்களைபோல இருந்ததை பார்த்ததாக அந்த ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்கள் என்னை அழைத்தால் அல்லது கண்டுபிடித்தால் இது ஏமாற்று வேலை என்று கூறிவிடுவேன் என மாணவிகளில் ஒருவர் சொல்லியதை ஒட்டுக்கேட்டதாகவும் ஆசிரியர் கூறியுள்ளார்.

தனிப்பட்ட தகவல், திறக்க கூடாது மற்றும் பணித்திட்டம் 11/9 என்று பெயரிடப்பட்ட இந்த போல்டரை ஆசிரிய கண்டுபிடித்துள்ளார்.

பெயர் பட்டியல் மற்றும் கொலைகளை செய்வது எப்படி? என விவரமான திட்டங்களை கொண்டிருந்த கையால் எழுதப்பட்ட திட்ட வரைவுகளும் இருந்துள்ளது.

துப்பாக்கிகளை வாங்குவது. சான்றுகளை எரித்து அழிப்பது, கொலை செய்யப்பட்டோரின் உடல்களை புதைப்பது போன்றவையும் அதில் இருந்துள்ளன.

இந்த நடவடிக்கையில் ஈடுபடும் போது நாம் எந்த வகை உடைகளை அணிய வேண்டும், நகங்கள் வேண்டாம். நமது ஆடைகளை அணிந்த தருணத்தில் இருந்து தலைமுடியை வெளிக்காட்ட வேண்டாம் என தெள்ளத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அந்த மாணவிகள் விசாரணை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top