News

அவள் ஆபத்தானவள்… நெருங்காதீர்கள்: புகைப்படத்தை வெளியிட்டு பொலிஸார் எச்சரிக்கை!

 

 

அமெரிக்காவில் உள்ள கொலம்பைன் மற்றும் 20 உயர்நிலைப் பள்ளிகளில் பயங்கரமான தாக்குதல் நடைபெற உள்ளதாக எச்சரிக்கை வந்ததை அடுத்து, ஆபத்தான இளம்பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்க புலன் விசாரணை பொலிஸார் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு இளம்பெண்ணின் புகைப்படத்துடன் எச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளார். அதில், பொலிஸார் ஒரு நம்பகமான அச்சுறுத்தலைப் பற்றி பொதுமக்களிடமிருந்து உதவி கேட்கின்றனர்.

நேற்று இரவு சோலீ பாரிஸ் என்கிற 18 வயது இளம்பெண் கொலராடோவிற்கு பயணித்து அச்சுறுத்தல்களை செய்துள்ளார். அவர் ஆயுததாரியாகவும், மிகவும் ஆபத்தானவராகவும் கருதப்படுகிறார்.  அவள் வெள்ளை நிற பெண், 18 வயது, கிட்டத்தட்ட 5’5″ உயரம், பழுப்பு முடி கொண்டவர். கடைசியாக ஒரு கருப்பு சட்டை அணிந்து, ராணுவ பேண்ட் மற்றும் கருப்பு பூட்ஸ் அணிந்திருந்தார். கடைசியாக அவர் ஜெபர்சன் கவுண்ட்டின் அடிவாரத்தில் சுற்றித்திருந்தார்.

இந்த நபரை நீங்கள் பார்த்தாலோ? அல்லது நபர் குறித்த தகவல் எதுவும் கிடைத்தாலோ உடனடியாக FBI-க்கு தகவல் கொடுங்கள். தயவு செய்து யாரும் அவளை அணுக வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொலம்பைன் உயர்நிலை பள்ளியில் கடந்த 1999ம் ஆண்டு ஏப்ரல் 20ம் திகதி இரண்டு பேர் சேர்ந்து நடத்திய தாக்குதலில் 13 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இந்த தாக்குதல் நடந்து 20 ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையில் தற்போது இந்த அச்சுறுத்தல் வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தற்போது 20 பள்ளிகளை மூடியதோடு புலன் விசாரணை பொலிஸார், தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

Latest News

To Top