Canada

ஆயுத முனையிலான கார் கடத்தல்- இரு சந்தேக நபர்களை கைது செய்ய பொதுமக்களை நாடும் பொலிஸார்!

 

ஆயுத முனையிலான கார் கடத்தல் தொடர்பில் இரு சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

ரொறன்ரோ நோர்த் யோர்க் பகுதியில், ஆயுத முனையிலான கார் கடத்தல் சம்பவங்கள் இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 6-ஆம் தேதி பேயார்விவ் மோல் அமைந்துள்ள பிராந்தியத்தில், செர்ப்பட் அவனியூ கிழக்கு மற்றும் டொன் மில்ஸ் பகுதியில் சிவப்பு நிற பி.எம்.டபுள்யூ ரக கார் ஒன்றையும் திருடிச் சென்றுள்ளனர்.

இதுவரை குறித்த காரை கண்டுபிடிக்க முடியாத நிலையில், பொலிஸார் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த சந்தேக நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள பொலிஸார், இவர்கள் குறித்த தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top