இராணுவத்திடம் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான வெற்று தோட்டாக்களை கொள்வனவு செய்த தற்கொலை குண்டுதாரி

கைத்தொழில் அபிவிருத்தி சபை ஊடாக இந்த நபர் வெற்று தோட்டாக்களை பெற்றுக்கொண்டுள்ளார்.
சிறிய வர்த்தகர்கள் மீள் உற்பத்திக்காக கழிவு பொருட்களை பெற்றுக்கொள்ளும் வசதியின் கீழ் அதனை பெற்றுக்கொண்டுள்ளார்.
வெல்லம்பிட்டியில் உள்ள தனது செம்பு தொழிற்சாலை உற்பத்திகளுக்காக இந்த தற்கொலைதாரி பல வருடங்களாக கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான வெற்று தோட்டாக்களை இராணுவத்திடம் இருந்து கொள்வனவு செய்து வந்துள்ளார்.
கடந்த ஈஸ்டர் தினத்தில் தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட குண்டுகள் இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் இராணுவத்திடம் இருந்து வெற்று தோட்டாக்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கு அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவரின் உதவி கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.