இராணுவ சீருடையில் அடுத்த கட்டத் தாக்குதல்! – பாதுகாப்பு தரப்பு எச்சரிக்கை

உயிர்த்த ஞயிறன்று தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், விரைவில் தமது இரண்டாம் கட்ட தாக்குதலை நடத்தலாம் என பாதுகாப்பு தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. வான் ஒன்றினை பயன்படுத்தி, இராணுவ சீருடையை ஒத்த சீருடையில் மறைந்திருந்து இந்த தாக்குதலை அவர்கள் நடத்தலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
5 இலக்குகள் மீது ஞாயிறு அல்லது திங்கட்கிழமை இந்த தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் ஊடாக அமைச்சர்களின் பாதுகாப்புக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.