News

இலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்! ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய காணொளி

 

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பான காணொளி வெளியாகி உள்ளது.

இலங்கையில் தற்கொலை தாக்குதல் மேற்கொள்வதற்கு முன்னர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் Abu Bakr al-Baghdadiயிடம் வாக்குறுதியளித்துள்ளனர். இந்தக் காணொளியை ஐ.ஸ் அமைப்பின் அமாக் அமைப்பு வெளியிட்டுள்ளது.

இலங்கை தற்கொலை தாக்குதல் செய்வதாக வாக்குறுதி வழங்கும் 59 வினாடி காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

 

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் ஒன்பது இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 321 பேர் கொல்லப்பட்டனர். 500 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலானது உலக நாடுகள் மத்தியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தாக்குதல் நடத்தியதாக ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று கொண்டது.

இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அண்ட் லெவனண்ட் (ஐஎஸ்ஐஎல் ) அமைப்பின் அமாக் செய்தி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு படத்தில் குற்றம் சாட்டப்பட்டதாக கூறப்படும் ஏழு ஆட்களுடன், தாக்குதலில் தொடர்புடையதாகக் கூறப்பட்ட சாஹிரா ஹசிம் உள்ளார்.

 

 

புகைப்படத்தில் நடுவில் இருக்கும் சாஹிரா ஹசிம் தான் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளார். அவரை சுற்றியுள்ள 7 பேரும் தங்களுடைய முகங்களை மூடியிருக்கின்றனர்.

ஆனால் பயங்கரவாதக் குழு, குண்டுதாரிகளின் பெயர்களை முன்னதாகவே வெளியிட்டுள்ளார். அவர்கள், அபு உபய்தா, அபு அல் முக்தார், அபு கலீல், அபு அல்-பரா, அபு முஹம்மது மற்றும் அபு அப்துல்லா ஆகியோர் ஆகும்.

2014ம் ஆண்டு கலிபேட்-ஐ தலைவனாக அறிவித்ததற்கு பின்னர் நடத்தப்பட்ட மிகப்பெரிய வெளிநாட்டு தாக்குதல் இதுவாகும்.

 

 

அந்த வீடியோ காட்சியினுள் சாஹிரா ஹசிமை தவிர மற்ற அனைவருமே தங்களுடைய முகங்களை மூடியிருக்கின்றனர்.

அவர்களுக்கு பின் பக்கமாக ஐஎஸ் கொடி வைக்கப்பட்டிருக்கிறது. வீடியோவில் எட்டு ஜிஹாதிகள் ஒரு வட்டத்தில் நிற்கின்றனர். கையைத் தொட்டு, மெய்மறந்து ஐஎஸ் தலைவர் கலீஃபிக்கு தங்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்துகின்றன.

கலீஃப் பொதுவெளியில் தோன்றி 5 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top