News

இலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 160 பேர் பலி, 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் !

 

இலங்கையில் இன்று ஆறு இடங்களில் நிழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பில் 160 பேர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

 

இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் ஆலயங்களில் திரண்டு இருந்தனர்.

 

இலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு: 102 பேர் பலி

இன்று காலை 8.45 மணி அளவில் கொழும்பில் உள்ள 3 தேவாலயங்கள், 3 நட்சத்திர ஓட்டல்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.

 

 

இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் ஞாயிறு காலை ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரை இதில் குறைந்தது 160 பேர் உயிரிழந்திருப்பதாக கொழும்பு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, ஷாங்ரி லா நட்சத்திர விடுதி, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி, சின்னமான் கிராண்ட் நட்சத்திர விடுதி, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருப்பது தற்போதுவரை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top