Canada

எட்மன்டனில் நான்கு வாகனங்கள் நேருக்கு நேர் மோதலில் இரு பெண்களுக்கு காயம்

 

எட்மன்டன் பகுதியில் நான்கு வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் காரணமாக பெண்  இருவர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் உள்ளார்.

குறித்த வாகன மோதல், எட்மன்டன் அந்தோனி ஹேண்டே டிரைவ் பகுதியில் திங்கள் பிற்பகல் 2-50 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இதில், 47-வயதுடைய பெண் ஒருவர் மற்றும் 28-வயதுடைய மற்றுமொரு பெண் ஆகியோர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.

இதையடுத்து, குறித்த பகுதியின் சாலைகள் மூடப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  மேலும், குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக 780-423-4567 or Crime Stoppers at 1-800-222-8477.என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top