Canada

எட்மன்டனில் 20-வயது நபரின் கொலை குற்றச்சாட்டில் பொலிஸார் தீவிர விசாரணை!

 

எட்மன்டன் பகுதியில் கடந்த ஏப்ரல் அன்று இடம்பெற்ற 20-வயது நபரின் கொலை குற்றச்சாட்டில் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த கொலை சம்பவம், ஏப்ரல் 5 அன்று எட்மன்டன் பகுதி 110 அவென்யூ 92 தெருவில் சரியாக காலை 2:45 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இதையடுத்து, குறித்த நபரின் உடல் வேக்ரேவில்லே, அல்டா பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டு DNA பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், குறித்த 20-வயது நபரின் உடல் எட்மன்டன் பகுதியை சேர்ந்தவர் உடல் என்று அடையாளம் காணப்பட்டது.

மேலும் ,குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக 780-423-4567 or Crime Stoppers at 1-800-222-8477 என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

Latest News

To Top