Canada

எட்மன்டன் தீ விபத்தில் வீட்டினுள் இருந்த இருவருக்கு நேர்ந்த கதி!

 

எட்மன்டன் தீ விபத்தில் சிக்கி வீட்டினுள் இருந்த இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த, தீ விபத்து எட்மன்டன் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட நிலையில், பொலிஸார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் வழக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கட்டுக்கடங்கா தீயினை கட்டுப்படுத்தினர்.

இதில், குறித்த தீ அருகில் இருந்த வீடுகளில் பரவியதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அனைவரும் பாதுகாப்பான இடத்தில தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இரண்டு நபர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

மேலும், குறித்த தீ விபத்து தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top