Canada

எட்மன்டன் நபரின் கொலை குற்றச்சாட்டில் தம்பதியினருக்கு பொலிஸார் வலைவீச்சு!

 

எட்மன்டன் ஆண் ஒருவரின் கொலை குற்றச்சாட்டில், தொடர்புடைய தம்பதியினரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

36, வயதுடைய விர்ஜில் க்வின் என்ற குறித்த நபர் கடந்த அக்டோபர் 17-ம் தேதி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து, குறித்த நபர் சிகிக்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக  தெரிவிக்கப்ட்டுள்ளது.

இந்நிலையில், எட்மன்டன் நபர் கொலை குற்றச்சாட்டில் தம்பதியினரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

குறித்த தம்பதியினர் 118 அவென்யூ 83 தெருவில் கடந்த அக்டோபர் 17-ம் தேதி இரவு 8-மணியளவில் அந்த    பகுதியில் தென்பட்டதாக அங்குள்ள சி.சி.டிவிகமெராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், குறித்த நபர் தெரிந்த பொது மக்கள் உடனடியாக எட்மன்டன் பொலிஸாருக்கு 780-423-4567 or Crime Stoppers at 1-800-222-8477 தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

Latest News

To Top