Canada

ஒட்டாவா தீ விபத்தில் 20-வயது நபர் உயிரிழப்பு -பெண் படுகாயம்!

 

ஒட்டாவா பகுதியில் வீடு ஒன்றில் இடம் பெற்ற தீ விபத்தில் சிக்கி 20-வயது நபர் உயிரிழந்ததுடன், பெண் ஒருவர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் உள்ளார்.

ஒட்டாவாவில் ஒருவரது வீட்டில் பற்றி எறிந்த தீயினை அணைக்க , 911 பொலிஸார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஒட்டாவாவின் போக் தெரு பகுதியின் மூன்றாவது தளத்திற்கு சரியாக காலை 7-மணியளவில் அவர்கள் விரைந்து வந்தனர்.

இதில், வீட்டினுள் இருந்த 20-வயதுடைய ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், பெண் ஒருவர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் உள்ளனர்.

மேலும், குறித்த பகுதியின் சாலைகள் மூடப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top