Canada

ஒன்றாரியோவில் 3475 ஆசிரியர்கள் பணி நீக்கம்; 851 மில்லியன் டொலர்களை சேமிக்கும் திட்டம்!

 

ஒன்றாரியோவில் எதிர்வரும் நான்கு ஆண்டுகளில் 3475 ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக புறோகிரசிவ் கொன்சவேடிவ் மாகாண அரசு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ஒன்றாரியோவில் தற்போது கடமையாற்றி வரும் ஆசிரியர்களின் எண்ணிக்கை மூன்று சதவீதத்தினால் குறைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறாக,முழு நேர அடிப்படையில் கடமையாற்றி வரும் ஆசிரியர்களை பணி நீக்குவதன் மூலம் 851 மில்லியன் டொலர்களை சேமிக்க முடியும் என்று முதல்வர் டக் ஃபோர்ட் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதில், 2019 முதல் 2020 பள்ளி ஆண்டுகளில், 1,558 வேலைகள் இழக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. <p> அடுத்த ஆண்டில் 619 வேலை இழப்புக்கள் இருக்கும். 2021 முதல் 2022 பள்ளி ஆண்டுகளில், மற்றொரு 738 நிலைகள் குறைக்கப்படும்.

இறுதியாக, 2022 முதல் 2023 560 வேலை இழப்புக்கள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top