Canada

கடை பணியாட்களை மிரட்டி கத்தி முனையில் கொள்ளையிட்ட நபர்: பொலிஸார் தீவிர வலைவீச்சு!

 

கடந்த சனிக்கிழமை, அன்று கத்தி முனையில் கொள்ளையிட்ட நபரை வின்ட்சர் பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

குறித்த திருட்டு சம்பவம், வின்ட்சர் 7225 வயோண்டோடே தெரு கிழக்கு பகுதியில் கடந்த சனிக்கிழமை,அன்று சரியாக காலை 9-30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதில், ஆண் நபர் ஒருவர் கத்தி முனையில் கடை பணியாட்களை மிரட்டி கொள்ளையிட்டு சென்றதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த கொள்ளை சம்பவம் அங்குள்ள சி.சி.டிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில், பொலிஸார் வழக்கு பதிவு செய்து குறித்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், தகவல் தெரிந்த பொது மக்கள் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Latest News

To Top