கட்டுநாயக்க விமான நிலைத்திற்கு அருகில் மர்மபொதி! வெடிக்க வைத்த பொலிஸார்

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் மர்மமான பொதி இருந்தமையினால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டது. கந்தானை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் இருந்து மர்ம பொதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற சந்தேகம் காரணமாக, அதனை அழிக்கும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டனர். தற்போது அந்த பொதி வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் எந்தவித பாதிப்பும் இல்லை எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.