News

கண்முன்னே எங்களின் வரலாறு அழிந்துவிட்டது: கண்ணீரில் தவிக்கும் பாரிஸ் மக்கள்!

பாரிஸில் உள்ள நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, நேரில் பார்த்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பேசுவதற்கு வார்த்தையில்லாமல் கண்கலங்கி நிற்கின்றனர்.

 

 

“850 வருட பழமையான ஆலயத்தில் பயங்கர தீ விபத்து: வேதனையளிக்கும் வீடியோ காட்சி!”  பாரிஸ் நகரத்தின் முக்கிய அடையாளமாக விளங்கி வந்த நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயத்தில்  மாலை 5.50 மணிக்கு ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தானது மேற்கூரை முழுவதும் பரவி, பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

 

 

உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருந்த இந்த தேவாலயம் தற்போது பெரும் சேதத்தை சந்தித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 

 

850 வருட பழமையான நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயம் பல வரலாற்று நினைவுகளையும், கலையமைப்புகளையும் கொண்டிருந்தது.

 

 

இந்த சம்பவத்தால் நகரின் பல பகுதிகளிலும் புகைமண்டலம் ஏற்பட்டது. இதனை நேரில் பார்த்த பாரிஸ் நகர மக்களும் சுற்றுலா பயணிகளும், வார்த்தைகளால் இந்த துயரத்தை விவரிக்க முடியாமல் கண்கலங்கியபடியே அந்த இடத்தில் அமர்ந்திருந்துள்ளார்கள்.

 

 

இதுகுறித்து ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், கண்முன்னே எங்களுடைய கலை மற்றும் வரலாறு அழிந்துவிட்டது. இடைக்காலத்தில் இருந்தே இந்த தேவாயலயம் இருந்து வந்தது. இது முற்றிலும் ஒரு மிகப்பெரிய பேரழிவு என பதிவிட்டுள்ளார்.

 

 

மற்றொருவர், பாரிஸ் சிதைந்துவிட்டது. முன்னர் இருந்ததை போல இந்த நகரம் இனி ஒருபோதும் இருக்காது. இது ஒரு சோகமான தருணம். நீங்கள் பிராத்தனை செய்பவர்களாக இருந்தால், இந்த நேரத்தில் தான் அதை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

 

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top