Canada

கனடாவின் ஒரு சில பகுதிகளில் கடும் மழை! வானிலை எச்சரிக்கை

 

கனடாவின் ஒரு சில பகுதிகளில் கடும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கனேடிய சுற்று சூழல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே, கிழக்கு ஒன்டாரியோ மற்றும் மேற்கு கியூபெக் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளுக்கு வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி சனிக்கிழமை வரை கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டாவா, காடினேவு, மற்றும் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கு, 20 முதல் 35 மிமீ வரை மழை பதிவாகியுள்ளது. அதே போன்று, ஒட்டாவா பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு 25 முதல் 40 மிமீ வரை மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, வாகன சாரதிகள் மிகவும் கவனத்துடன் தங்களது வாகனங்களை கையாளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அதனை சுற்றியுள்ள குறித்த பகுதிகளுக்கு 50 மிமீ வரை மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top