Canada

கனடாவின் கியூபெக் நகரில் சுமார் 1000 பேர் வீடுகளை இழந்த சோகம்!

 

கனடாவின் கியூபெக் நகரில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் மக்கள் கடுமையான சூழலை எதிர் கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக, தற்போது சுமார் 1000-பேர் வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சுமார் 2,100 வீடுகளில் தங்கள் உடமைகளை இழந்து பலத்த சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனேவே, 5, 000 மக்கள் தங்களது வீடுகளை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

கடந்த சில நாட்களாக கியூபெக் முழுவதும் பெய்த மழையால் வெள்ளக்காடாகியுள்ளது. குறிப்பாக நேற்று, மான்ட்ரியலின் மேற்கு பகுதியையும், கியூபெக் நகரத்தின் தெற்குப் பகுதியின் பாய்செஸ்சின் பகுதியையும் வெள்ளம் கடுமையாக சூழ்ந்து கொண்டது.

ஆறுகள் மற்றும் கால்வாய்களில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் மக்கள் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.   எவ்வாறாயினும், வெள்ளம் இம்மாத இறுதிக்குள் வடியும் என்று வானிலையாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

 

 

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கனேடிய படையினர் ஏராளமானோர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் இதையடுத்து, முன்னதாக குறித்த பகுதிகளை பொது பாதுகாப்பு அமைச்சர் ஜெனீவீவ் குய்ல்பாவுல் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top