Canada

கல்கரியில் துப்பாக்கி சூடு தொடர்புடைய ஐந்து நபர்களுக்கு கல்கரி பொலிஸார் தீவிர வலைவீச்சு!

 

கல்கரி மாகாணத்தில் அமைந்துள்ள வாகன நிறுத்துமிடம் ஒன்றில் இரண்டு நபர்களை சுட்டு கொல்லப்பட்ட நிலையில், இதில் தொடர்புடைய ஐந்து நபர்களை தேடும் பணி தீவிரமாக நடை பெற்று வருகின்றது.

இதில், துப்பாக்கி சூட்டில் இலக்கான நபர்கள் 25 வயதான ஜஸ்திப் சிங் மற்றும் 22 வயதான ஜாப்னே மாலி ஆகியோரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த துப்பாக்கி சூடு, ஒரு வடகிழக்கு கல்கரி மாகாணத்தில் 37 அவென்யூ என்.இ.இ 2400 தொகுதியில், வாகன நிறுத்துமிடம் ஒன்றில் வியாழக்கிழமை ஏப்ரல் 3-ம் தேதி இடம் பெற்றுள்ளது.

இதையடுத்து, இது தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அங்குள்ள சி.சி.டிவி காட்சிகளை கொண்டு ஐந்து நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

இந்நிலையில், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை முன்னெடுத்து வரும் பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் 403-266-1234 அல்லது Crime Stoppers முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top