News

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் விரையும் ரணில்!

 

கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பைத் தொடர்ந்து பிரதமர் குறித்த பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று காலை கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திலும், நீர்கொழும்பு, கட்டான கட்டுவப்பிட்டிய தேவாலயத்திலும் இரு பாரிய குண்டுவெடிப்பு சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன

இந்நிலையில் கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் ஏற்பட்ட வெடிப்பு தொடர்பில் பார்வையிட பிரதமர் ரணில் விக்ரமசிங்க கொச்சிக்கடை தேவாலயத்திற்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 25 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top