Canada

கோர விபத்தில் சிக்கி 4-குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்: பெண் ஓட்டுநர் கைது!

 

வாகன மோதலில் சிக்கிய 4-குழந்தைகள் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது.

குறித்த வாகன விபத்தில் சிக்கி, 7வயது மற்றும் 13-வயது, இரண்டு 12-வயது குழந்தைகள் பெண் வாகன ஓட்டுனர் உட்பட ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் உள்ளனர்.

இந்த விபத்து, கென்னடி மற்றும் மெக்கன் வீதிகளுக்கு இடையே உள்ள Stouffville Road, பகுதியில் வியாழன் காலை 8:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

விசாரணையில், குறித்த விபத்து வாகன ஓட்டுனர் அதிவேகமாக வாகனத்தை இயக்கத்தில் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து, 47- வயதான குறித்த ஓட்டுனரை கைது செய்த பொலிஸார் ( Kai Ming) விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இந்நிலையில், குறித்த ஓட்டுநர் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நீதிமன்றத்தின் முன்பு தோன்ற உள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top