சம்மாந்துறை , கல்முனை, மற்றும் சவளக்கடை பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும்வகையில் ஊரடங்கு உத்தரவு

கல்முனை சாய்ந்தமருது பகுதியில் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்குமிடையில் தொடர்ந்த மோதலையடுத்து உடன் அமுலுக்குவரும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சம்மாந்துறை , கல்முனை, மற்றும் சவளக்கடை உடன் அமுலுக்கு வரும்வகையில் இந்த உரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சாய்ந்தமருதில் வீடு ஒன்றை முற்றுகையிட்ட பாதுகாப்புத்தரப்பு அதனைச் சோதனையிட முற்பட்டபோது இருதரப்பினருக்குமிடையே கடும் துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றது.
மேலும் அங்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் உடைமைகள் சில கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த நிலையில் குறித்த இடத்திற்கு மேலதிக படைகள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் கடும் தேடுதல் வேட்டையும் இடம்பெற்றுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.