News

சித்திரவதைகளை தடுப்பதற்காக ஐ.நா.வின் உபகுழு இலங்கைக்கு வருகை!

இலங்கை மக்களின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராய்வதற்கு சித்திரவதைகளை தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் உபகுழு, இலங்கைக்கு செவ்வாய்க்கிழமை விஜயம் செய்யவுள்ளது.

இந்த விஜயத்தில் நான்கு பேர் கலந்துகொள்ளவுள்ளதாகவும்,குறித்த குழு எதிர்வரும் 12ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து,  இவர்களது விஜயத்தின் போது அரச அதிகாரிகள், மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்திக்கவுள்ளதாகவும் ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 2017ஆம் ஆண்டு, இலங்கை உறுதியளித்தப்படி சித்திரவதை தடுப்புக்கான சுதந்திர தேசிய பொறிமுறை ஒன்றை நடைமுறைப்படுத்துவது குறித்தும் ஆராயப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை அபிவிருத்தி செய்யும் பொருட்டு அரசு முன்னெடுத்துள்ள திட்டங்கள் பற்றியும் கவனத்தில் கொள்ளப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top