News

தாக்குதல் பொறுப்பை ஏற்றது ஐ.எஸ்.ஐ.எஸ்.!

இலங்கையில் நேற்றுமுன்தினம் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்புத் தாக்குதகளுக்கான பொறுப்பை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.அமாக் செய்தி நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் நடந்த தாக்குதலை திட்டமிட்டு வழி நடத்தியது ஐ.எஸ். பயங்கரவாதிகள் என்று தெரிய வந்துள்ளது. நேற்று ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவு இணையம் ஒன்றில் மூன்று தற்கொலைப் படை பயங்கரவாதிகளின் படம் வெளியிடப்பட்டது.

 

 

அந்த படங்களில் அபு உபைதா, அப்துல்பாரா, அப்துல் முக்தர் ஆகிய 3 ஐ.எஸ். பயங்கரவாதிகள் உள்ளனர். அவர்கள் ஐ.எஸ். கொடிகளை பிடித்தப்படி நிற்கிறார்கள். இவர்கள் மூவரும் கொழும்பில் தாக்குதல் நடத்திய தற்கொலை படையில் இடம் பெற்று இருந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இதேவேளை, “நியூசிலாந்தில் பள்ளிவாசல்களுக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே ஈஸ்டர் அன்று இலங்கையில் வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து விசாரணை இடம்பெற்று வருகின்றது” என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top