News

தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புடன் ஹிஸ்புல்லாவின் தொடர்புகள் அனைத்தும் ஆதாரத்துடன் அம்பலம்

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சை, ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறும் விசேட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு தனியான அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது.

அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி மூன்று அமைச்சுக்களை மாத்திரமே தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முடியும். பாதுகாப்பு, மகாவலி மற்றும் சுற்றாடல் ஆகிய துறைகளே ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க முடியும்.

சட்டத்திற்கு முரணாக இந்த அமைச்சு பொறுப்பை வைத்திருக்கும் ஜனாதிபதி, நாட்டில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய முதலாவது நபராக மாறியுள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் துக்கதினத்தை அனுஷ்டிக்குமாறே நான் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவிடம் கூறினேன்.

ஆனால் அவர் அதனை திரிபுப்படுத்தி, கடைகளை மூடி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, கடும்போக்காளராக மாற்றும் நடவடிக்கை தொடர்பாக அரசாங்கத்தின் புலனாய்வு பிரிவினரிடம் முஸ்லிம் குழுக்கள் பல ஆண்டுகளாக முறைப்பாட்டினை வழங்கி வந்தனர்.

2017 ஆம் ஆண்டு ஷஹாரனை கைது செய்ய வேண்டும் என கோரி காத்தான்குடியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் நடத்தியிருந்தார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும், கிழக்கு மாகாண ஆளுநர் பற்றியும், தேசிய தவ்ஹித் ஜமாத்துடனான அவருடைய தொடர்புகள் பற்றியும் தற்போது பாரிய கேள்விகள் எழுகின்றன.

இதுபற்றியும், இந்த குழு ஏனைய அரசியல்வாதிகள், பாதுகாப்பு தரப்பினருடன் வைத்திருந்த உறவுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

 

Latest News

To Top