News

நாங்கள் நினைத்தால் அரசைக் கவிழ்ப்போம் … எச்சரிக்கும் சம்பந்தன்!

 

நாங்­கள் நினைத்­தால் இந்த அரசை எந்­நே­ரத்­தி­லும் கவிழ்ப்­போம். அத­னாால் தமிழ் மக்­கள் தங்­கள் உரி­மை­களை அனு­ப­விக்க இந்த அரசு இட­ம­ளிக்க வேண்­டும் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் திரு­கோ­ண­மலை மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரிவித்துள்ளார்.

ஐக்­கிய தேசிய முன்­னணி அர­சுக்கு தனித்து இயங்­கக்­கூ­டிய பலம் இல்லை. நாடா­ளு­மன்­றத்­தில் 113 பேர் கூட ரணில் அர­சுக்கு இல்லை. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஆத­ர­வு­டன்­தான் இந்த அரசு இயங்­கு­கின்­றது. எமது ஆத­ர­வு­டன்­தான் 119 வாக்­கு­க­ளு­டன் வரவு – செல­வுத் திட்­டம் நிறை­வே­றி­யது.

நாங்­கள் அர­சைப் பாது­காத்து வரு­கின்­றோம் என்று வெளி­யில் சிலர் விச­மத்­த­ன­மான பரப்­பு­ரை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர். உண்­மை­யில், அர­சைப் பாது­காப்­பது எமது நோக்­கம் அல்ல. தமி­ழர்­க­ளுக்­கான உரி­மை­களை வென்­றெ­டுக்­க­வும், நிரந்­த­ர­மான ஓர் அர­சி­யல் தீர்­வைக் காணும் வகை­யி­லும்­தான் இந்த அர­சுக்கு நாம் ஆத­ரவு வழங்கி வரு­கின்­றோம்.

இதை அர­சு­டன் நாம் நடத்­தும் பேச்­சு­க­ளின்­போது தெளி­வா­கக் கூறி­யுள்­ளோம். அதை உணர்ந்து அரசு செயற்­பட வேண்­டும். இல்­லை­யேல், அர­சுக்­கான எமது ஆத­ரவை விலக்­கிக்­கொள்­வோம். அப்­போது அரசு கவிழ்ந்தே தீரும்.

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­துக்­கான பணி­கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­த­போ­தி­லும், தற்­போது அந்­தப் பணி­கள் இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளன. அந்­தப் பணி­க­ளைத் தொடர்ந்து முன்­னெ­டுக்­கு­மாறு அர­சி­டம் நாம் வலி­யு­றுத்­தி­யுள்­ளோம்.

ஐ.நா. தீர்­மா­னத்­தின் பரிந்­து­ரை­க­ளை­யும் முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறு அர­சி­டம் நாம் கோரி­யுள்­ளோம். ஐ.நா. ஊடாக அர­சுக்கு அழுத்­தம் வழங்கி வரு­கின்­றோம். ஐ.நா. தீர்­மா­னத்­தின் பரிந்­து­ரை­களை இலங்கை அரசு உதா­சீ­னம் செய்­தால் அதன் விளைவு மிக­வும் பார­தூ­ர­மா­ன­தாக – மோச­மா­ன­தாக இருக்­கும் என்­றார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top