News

நுவரெலியா ஹெவெளிய மஹிந்த மாவத்தை பகுதியில் 198 டெட்டனேட்டர்களை மீட்ட பொலிஸார்!

 

நுவரெலியா ஹெவெளிய மஹிந்த மாவத்தை பகுதியில் கால்வாய் ஒன்றில் இருந்து 198 டெட்டனேட்டர்கள் மீட்கபட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

இன்று காலை பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிவட ஈடுபட்டனர். இதன் போது பிரதேச மக்களால் குறித்த பகுதியில் உள்ள கால்வாயில் பொதி ஒன்று காணப்பட்டதை பொலிஸாருக்கு தெரியப்படுத்தினர்.

 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாரும் இராணுவத்தினரும் பொதியினை மீட்டு பரிசோதனைக்கு உட்படுத்திய போது குறித்த பொதியில் 198டெட்டனேட்டர்கள் காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர்

 

 

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நுவரெலியா பொலிஸார், சம்பவம் தொடர்பில் இதுவரையில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யபடவில்லை எனவும் இது தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

 

21 கைக்குண்டுகள், 6 வாள்களுடன் மோதரையில் மூவர் சிக்கினர்!

கொழும்பு, மோதரைப் பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 21 கைக்குண்டுகளும், 6 வாள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போதே இவை சிக்கின.
குறித்த கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top