News

பரிஸில் 70 இற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது!

 பிரான்ஸ் தலைநகர் பரிஸில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எரிபொருள் விலை உயர்வை கண்டித்து 23வது வாரமாகவும் நேற்று (சனிக்கிழமை) தலைநகர் பரிஸில் ‘யெலோ வெஸ்ட்’ ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பரிஸ் பொலிஸார் கட்டுப்படுத்திய நிலையில் ஆர்பாட்டகாரர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் பொலிஸாருக்கும், ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்த பொலிஸார் நீர்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகங்களை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து 70 இற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ள அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top