Canada

பாடசாலைப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் இரண்டு மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!

 

கனரஸ்கா காட்டுப்பகுதி பாதையில் பாடசாலைப் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில், இரண்டு மாணவர்கள் காயமடைந்துள்ளதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தின் போது சிறிய காயங்களுக்கு உள்ளான 9 மற்றும் 11 வயதுடைய இரண்டு மாணவர்களும், பேரூந்தின் சாரதியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைகளின் பின்னர் வெளியேறியுள்ளனர்.

அந்த பேரூந்தில் இருந்த மேலும் ஆறு மாணவர்களுக்கு காயங்கள் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.  மேலும், பேருந்தை செலுத்திச் சென்ற டூர்ஹம் பிராந்திய பாடசாலை பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

தகவல் அறிந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்ற போது, பேருந்து வீதி ஓரத்தில் கவிழ்ந்துபோய், அருகே இருந்த பள்ளத்தில் வீழ்ந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், குறித்த அந்த வீதி வழியாக வடக்கு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து, கட்டுப்பாட்டினை இழந்து, வீதியின் நடுப்பகுதி தடுப்பினையும் கடந்து கிழக்கு நோக்கிய வழித்தடத்தினுள் சென்று, அதன் ஓரத்தில் உள்ள பள்ளத்தினுள் கவிழ்ந்து வீழ்ந்துள்ளமை விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top