Canada

பிரிட்டிஷ் கொலம்பியாவில் குறி வைத்து நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி!

 

பிரிட்டிஷ் கொலம்பியாவில் குறி வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் 20-வயதுடைய ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த பிரிட்டிஷ் கொலம்பியா அபே டிரைவ் மற்றும் 176 வது தெருவில் வெள்ளிக்கிழமை அன்று இரவு 7-மணியவில் குறி வைத்து துப்பாக்கி சூடு மேற் கொள்ளப்பட்டுள்ளது.

இதில், 20 -வயதுடைய நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக, தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஏராளமான பொலிஸார் குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டனர்.

மேலும், நெடுஞ்சாலை 1-இல் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.  இந்நிலையில், குறித்த கொலை குற்றசாட்டின் அடிப்படையில் துப்பாக்கி சூடு தொடர்பில் பல்வேறு கோணத்தில் பொலிஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top