News

புனித செபஸ்தியன் ஆலயத்திற்குள் நுழையும் தற்கொலைதாரி! வெளியானது காணொளி

 

உயிர்த்த ஞாயிறன்று கொழும்பு உள்ளிட்ட இடங்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் 350க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

 

 

தாக்குதல் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது. நீர்கொழும்பு – புனித செபஸ்தியன் தேவாயலத்தில் இடம்பெற்ற தாக்குதலிலேயே அதிகளவான உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தன. ஒப்பீட்டளவில் குறித்த ஆலயத்தில் சேதமும் அதிகமாக ஏற்பட்டுள்ளது.

 

 

இந்நிலையில், குறித்த ஆலயத்திற்குள் தற்கொலை குண்டுதாரி உள்நுழையும் காட்சிகள் அடங்கிய காணொளி தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி, வெடிகுண்டு அடங்கிய பையினை தோளில் சுமந்து வரும் தற்கொலைதாரி, ஆலயத்திற்குள் நுழைந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார். இது குறித்த மிகவும் தெளிவான காணொளி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

To Top