News

பேருந்து ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு: பிரித்தானியர்களின் விருப்ப சுற்றுலாஸ்தலத்தில் மோசமான விபத்து!

 

பிரித்தானியர்களின் விருப்ப சுற்றுலாஸ்தலமான Malaga நகரில் பேருந்து ஒன்று வரிசையாக 10 கார்களின்மீது மோதியதால் மோசமான விபத்து நேரிட்டது.

அந்த பேருந்தின் ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவரது பேருந்து வரிசையாக 10 கார்கள் மீது மோதியது.

 

 

அதில் 10 கார்களும் ஒன்றின்மீது ஒன்று ஏறி நின்றதால் அந்த இடமே போர்க்களம் போல் ஆனது.  ஸ்பெயினிலுள்ள Malaga நகரில் இந்த மோசமான விபத்து நேரிட்டது.

 

 

விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கார்களுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். மொத்தம் 13 பேர் இந்த விபத்தில் சிக்கினாலும், அதிசய வண்ணமாக பேருந்தின் ஓட்டுநருக்கு மட்டுமே காயம் ஏற்பட்டது.

 

 

அவசர உதவிக் குழுவினர் பேருந்து ஓட்டுநரை மீட்டு முதல் உதவிக்குப்பின் ஆம்புலன்ஸ் உதவியுடன் Malagaவில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

 

ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பிரித்தானியர்கள் Malagaவுக்கு சுற்றுலா வருகிறார்கள். 2014 கணக்குப்படி, ஸ்பெயினில் 236,669 பிரித்தானியர்கள் இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top