இவ்வாறு நாடுகடத்தப்பட்ட 6 பேரில் ஒருவர் மாகந்துரே மதூஷின் உறவினர் என குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

குறித்த 6 பேரும் இன்று அதிகாலை 4.45 மணிக்கு டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தபோது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவர்களை பொறுபேற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

டுபாயில் இருந்து செனவிரத்ன மாவத்தகே தயான் புத்திம பெரேரா, மொஹமட் பதியுதீன் மொஹமட் ரியாஷ், ரணசிங்ககே சுரேஷ் லசந்த, யோன் மெரங்க சைமன் ஹேவகே ரூபதாச, மொஹமட் ஜபீர் மொஹமட் ஹிப்ரே, சமரசிங்ககே நிலான் ரொமேஷ் ஆகியோரே இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டவர்களாவர்.

இந்நிலையில் கடந்த காலங்களில் மாகந்துரே மதூஷுடன் கைதானவர்களுள் 15 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், இன்று மேலும் 6 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, டுபாயில் வைத்து மாகந்துரே மதூஷுடன் 21 பேர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.