மாயமான 21-வயது இளம் பெண்ணை தேடும் பணி தீவிரம்! பொது மக்களிடம் உதவி கோரிய பொலிஸார்

மாயமான 21-வயது எட்மன்டன் இளம் பெண்ணை தேடும் முயற்சியில் பொலிஸார் தீவிரம் காட்டி வருவதால் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
குறித்த பெண் கடைசியாக நேற்று காலை 3-மணியளவில் தென்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எட்மன்டன் பகுதியை சேர்ந்த குறித்த பெண் 99 தெரு மற்றும் 169 அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
அவரின் அடையாளங்களாக பொலிஸார் கூறும்போது, 5’8 “உயரமான, 132 பவுண்டுகள், மற்றும் தோள்பட்டை நீளம் பழுப்பு முடி மற்றும் நீல கண்களை கொண்டவர்.
கடைசியாக அவர் ஒரு கருப்பு குளிர்கால கோட் அணிந்திருந்தார். குறித்த பெண் கடந்த சனிக்கிழமை காலை மாயமானதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக 780-423-4567 என்ற முகவரிக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.