மிசுசாகா துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – பொலிஸார் தீவிர விசாரணை!

மிசுசாகா பகுதியில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில், பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்தோடு, இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். ஹூரோன்டாரியோ வீதி மற்றும் மெத்திசன் புஃளிவார்ட் பகுதியில் உள்ள தொழிற்சாலைக் கட்டடம் ஒன்றுக்கு வெளியே, நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) காலை ஏழு மணியளவில் துப்பாக்கி சூடொன்ற இடம் பெற்றது.
இதன்போது, பல்வேறு துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்ட ஆண் ஒருவர், உயிர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் பற்றி குறித்த விபரங்கள் எவையும் வெளியிடப்படாத நிலையில் பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.