Business

முதல் குண்டுவெடிப்பில் காயங்களுடன் உயிர்தப்பி, 2வது தாக்குதலில் உயிரிழந்த அண்ணன்-தங்கை!

 

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரித்தானியாவின் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் – தங்கை முதல் குண்டு வெடித்ததில் காயங்களுடன் தப்பி, இரண்டாவது குண்டுவெடிப்பில் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கையில் 8 இடங்களில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலானது ஒட்டுமொத்த உலகநாடுகளையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த தாக்குதலில் வெளிநாட்டினர் உட்பட 290 பேர் உயிரிழந்திருப்பதோடு, 400-க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

இந்த நிலையில் வெடிகுண்டு விபத்தில் இருந்து உயிர்தப்பிய லண்டனை சேர்ந்த டேவிட் (21) என்கிற இளைஞர் தன்னுடைய குடும்பத்திற்கு நடந்த துயரம் குறித்து பேசியுள்ளார். ஈஸ்டர் விடுமுறையில் ஆசியாவை சுற்றிப்பார்க்க என்னுடைய தந்தை மத்தேயு (61), சகோதரன் டேனியல் லின்ஸி (19) மற்றும் சகோதரி அமேலி (15) ஆகியோருடன் சென்றிருந்தோம்.

 

 

அன்றைய தினம் நாங்கள் இலங்கையை விட்டு கிளம்புவதாக இருந்தது. காலை உணவு ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது தான் வெடிகுண்டு விபத்து ஏற்பட்டது. நாங்கள் அனைவரும் அங்கிருந்து ஓட ஆரம்பித்தோம். லேசான காயங்களுடன் தப்பும்போது மீண்டும் வேறு ஒரு குண்டு வெடித்தது.

 

 

என்னுடைய தந்தை சிறிது இடைவெளியில் தரையில் கிடந்தார். அவர்களை அடுத்து, டேனியலும், அமேலியும் மயங்கிய நிலையில் கிடந்தார்கள். என்னுடைய தந்தையின் முகத்தில் மட்டும் கீறல்கள் ஏற்பட்டிருந்தன. மற்றபடி எங்கள் மூன்று பேருக்கும் பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை.

 

 

மயங்கிய நிலையில் கிடந்த என்னுடைய சகோதரனையும், சகோதரியையும் வேகமாக மீட்டு மருத்துவமனைக்கு கண்டு சென்றோம். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துவிட்டனர்.

வெளிப்பக்கத்தில் எந்த காயமும் ஏற்படாமல் இருந்ததால், அவர்கள் உயிருடன் தான் இருக்கிறார்கள் என்று நாங்கள் நினைத்திருந்தோம். ஒருவேளை உள்காயம் ஏற்பட்டிருக்கலாம் என வேதனை தெரிவித்துள்ளார்.  காயமடைந்த மத்தேயு, உயிர்பிழைத்த தன்னுடைய மகனுடன் திங்கட்கிழமையன்று லண்டன் வந்து சேர்ந்தார்.

 

 

Latest News

To Top