News

யாழ்ப்பாணம் முஸ்லிம் பகுதிகள் சுற்றிவளைப்பு – நிலக்கீழ் பதுங்குகுழி கண்டுபிடிப்பு!

முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் யாழ்.நாவாந்துறை மற்றும் ஐந்து சந்திப் பகுதிகளில் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரையில் மேற்கொள்ளப்பட்ட ‍சுற்றிவளைப்பின்போது பெண் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, கார் ஒன்று மீட்கப்பட்டது, பெரிய அளவிலான தேயிலைப் பைக்கற்றுகள் மூன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

 

ஐந்து சந்தியில் முஸ்லிம் பகுதியில் நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது நிலத்தின் கீழான பதுங்கு குழி ஒன்று தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடிகளைக் கொண்ட வீடொன்றின் கீழ் பதுங்கு குழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

யாழ். ஐந்து சந்தி பகுதியில் வீட்டினுள் தோண்டப்பட்ட கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை கால பகுதியில் இலங்கை முழுவதும் தேடுதல் நடத்தப்படுகின்றது. அந்த வகையில் யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து இன்றைய தினம் பெரியளவிலான சுற்றிவளைப்புத் தேடுதலை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது அப்பகுதியில் உள்ள வீடொன்றினை சோதனையிட்ட போது வீட்டினுள் நிலபதிப்பின் கீழ் (மார்பிள்) கிணறு ஒன்றினை கண்டறிந்துள்ளனர். வீட்டினுள் கிணறு தோண்டப்பட்டு அதன் மீது மார்பிள் பதித்து மறைத்து கிணற்றினை பயண்படுத்தி வந்துள்ளனர்.

 

 

குறித்த கிணறு தொடர்பில் இராணுவத்தினரும் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை இந்த தேடுதலில் போதே அதேப் பகுதியில் உள்ள மற்றொரு வீட்டில் நிலக்கீழ் தளம் (Underground)கண்டு பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top