Canada

ரொறன்ரோ  பகுதியில் கட்டிடத்தில் 6-வது மாடியில் ஏற்பட்ட கொடூர தீ – இருவர் கவலைக்கிடம்!

 

ரொறன்ரோ  பகுதியில் கட்டிடத்தில் 6-வது மாடியில் இடம் பெற்ற தீ விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தீ விபத்து, டொராண்டோ ஜேம்சன் அவென்யூ மற்றும் கிங் ஸ்ட்ரீட் பகுதியில் கட்டிடத்தின் 6-வது மாடியில் சரியாக இரவு 6:40-மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இதையடுத்து, குறித்த தீ விபத்து தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டதின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு படையினர் கட்டுக்கடங்கா தீயினை கட்டுப்படுத்தினர்.

இதில், சிக்கிய இருவர் படுகாயமடைந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் சிகிக்சைக்காக மருத்துவமனையில் தீவிர சிகிக்சை பிரிவில் ஒருவர் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த பகுதியின் சாலைகள் மூடப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top