Canada

ரொறன்ரோ துப்பாக்கி சூட்டில் பெண் படுகாயம்! சூடுபிடிக்கும் பொலிஸார் தீவிர விசாரணை

 

ரொறன்ரோவில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில், பொலிஸார் தற்போது தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணியளவில் பெண் ஒருவர் ரொறன்ரோவில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து, குறித்த பெண் அவசர மருத்துவப் பிரிவிற்கு கொண்டுச் செல்லப்பட்டு தற்போது சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது, அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக அவசர மருத்துவப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட குறித்த, பெண்ணின் பெயர் வயது உள்ளிட்ட விபரங்கள் எவையும் வெளியிடப்படாத நிலையில், மேலும், எந்தப் பகுதியில் வைத்து அந்தப் பெண் சுடப்பட்டார் என்பது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, பொலிஸார் இது குறித்து மேலும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top