Canada

வின்ட்சர் வீடு ஒன்றில் இடம் பெற்ற தீ விபத்தில் $80,000 மதிப்புள்ள பொருட்கள் சேதம்!

 

வின்ட்சர் பகுதியில் வீடு ஒன்றில் இடம் பெற்ற தீ விபத்தில் $80,000 மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளது.  குறித்த தீ விபத்தினை அடுத்து, வின்ட்சர் டோனெல்லீ செயின்ட் 3100-பிளாக் பகுதிக்கு நள்ளிரவில் தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு துறையினர் அழைக்கப்பட்டனர்.

இதையடுத்து, சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கட்டுக்கடங்கா தீயினை கட்டுப்படுத்தினர்.  இதில், வீட்டினுள் இருந்த $80,000 மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தது, இருப்பினும், உயிர் சேதம் ஏதும் ஏற்பட வில்லை என்று தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது. மேலும், இது தொடர்பில் வின்ட்சர் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top