Canada

விமான நிலைய வெடிப்பு சம்பத்தில் தீக் கரையான மூன்று கார்கள்!

கனடா, மனிடோபா செயின்ட் அன்ட்ரூஸ் ஆகிய விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று கார்கள் திடீரென வெடித்து தீப்பிடித்துள்ளன.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஏற்பட்ட இவ் வெடிப்பு சம்பவத்தில் விமான நிலையம் கரும் புகையால் சூழ்ந்துள்ளது.

மூன்று கார்கள் தீக் கிரையான நிலையில், ஒரு கார் சிறியளவில் சேதமடைந்ததாக செயின்ட் அன்ட்ரூஸ் தீயணைப்பு பிரிவின் தலைமை அதிகாரி குறிப்பிட்டார்.

இருப்பினும், குறித்த வெடிப்பு சம்பவத்தில் எவ்வித உயிரிழப்புகளும் சம்பவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top